2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலைக்கு சிற்றூழியர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 75 சிற்றூழியர்களை நியமிப்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இதன் போது இவ்வருடத்தில் 75 சிற்றூழியர்களை நியமிப்பது தொடர்பில் உரிய நபர்களது பெயர் விபரங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேற்படி வைத்தியசாலையில் சுத்திகரிப்பு தொழிலாளர்களாக நீண்டகாலம் சேவை செய்தவர்களில் சிறந்த சேவையை வழங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் இச்சிற்றூழியர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் நியமிக்கப்படவிருக்கும் சிற்றூழியர்கள் தங்களது சேவையை வெறும் சேவையாக நிறைவேற்றாமல் சமூகக்கடமையாகவும் கருதி தங்களது பணியை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இவ்வருடம் 75 பேர் சிற்றூழியர்களாக நியமிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவித்த அமைச்சர் இத்தொகை இவ்வைத்தியசாலைக்கு போதாது என்றும் எனவே வருகிற 2011 ம் வருடத்திற்கான மேலும் ஒருதொகை சிற்றூழியர்களை சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி நியமிப்பதற்குத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். எனவே இவ்வருடம் நியமனம் பெறாதவர்கள் அடுத்த வருடம் நியமனங்களின் போது சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலை சுத்தமானதாகவும் சந்தோசத்தை ஈட்டித்தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே வைத்தியசாலை நிர்வாகத்தினதும் தனதும் நோக்கம் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வைத்தியசாலையை அழகாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--