2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கரவெட்டி வதிரி தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கரவெட்டி வதிரி தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை 94 ஆயிரம் ரூபா காசோலையை வழங்கியுள்ளார்.

வதிரி கூட்டுறவுச் சங்க பயிற்சியாளர்களுக்கு நவம்பர் மாத பயிற்சிக்காலக் கொடுப்பனவாக இக்காசோலை வழங்கப்பட்டுள்ளது.

இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து காசோலையை வதிரி தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க தலைவர் இலட்சுமி காந்தன் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டார்.

கூட்டுறவுச் சங்கத்திற்கு அமைச்சர் மாதா மாதம் தொடர்ந்து இத்தொகையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--