2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு புதுப்பொலிவு பெறும் யாழ். வீதிகள்

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். பிரதான வீதியை புனரமைப்புச் செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த வீதி திருத்த பணிகள் தொடர்பாக புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஆர். யோகேஸ்வரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதியை அகலப்படுத்துவதற்காகவே இவ்வளவு காலமும் வீதி புனரமைக்கப்படாமல் இருந்தது என்றார்.

தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடுகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதுடன், கேரதீவு - சங்குப்பிட்டி பாதையையும் திறந்துவைக்கவுள்ளார்.


 


  Comments - 0

 • xlntgson Monday, 17 January 2011 09:55 PM

  yaro oruvan, ஜனாதிபதியை யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல ஏனைய பகுதிகளுக்கும் அடிக்கடி வரச்செய்யுங்கள்!

  Reply : 0       0

  ameer Tuesday, 11 January 2011 02:47 PM

  பொதுமக்களுக்fh இந்த வீதிகள்
  அல்லது ஜனாதிபதியின் ஒருநாள் வரவிற்கா?

  Reply : 0       0

  yarro oruvan Wednesday, 12 January 2011 12:08 AM

  ameer, எப்படியோ வேலை நடந்தால் சரி.யாழ்ப்பாணம் என்ன colombo என்ன எல்லாமே நம்ம நாடுதான்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X