2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து எழுவைதீவு கடற்றொழிலாளர்கள் ஹர்த்தால் அனுஷ்டிப்ப

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து யாழ். எழுவைதீவு கடற்றொழிலாளர்களால் இன்று செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடியைக் கண்டித்தும் அவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காகவும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி எஸ்.சத்தியதாசன் தெரிவித்தார்.

எழுவைதீவு கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லாது இன்று காலை 9 மணி முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எழுவைதீவில் வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பாடசாலைகள் இயங்கமுடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--