2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், தாஸ்)

உரும்பிராய், யோகபுரம் பகுதியில் வளவு ஒன்றின் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை 4 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து கிராமசேவையாளரால் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு யாழ் நீதவான் நீதிமன்றின் நீதிபதி அ. ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவரான மேற்படி சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X