2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழ். விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி)

யாழ். குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற சிறிய வகை லொறி புங்குடுதீவு மடத்து வெளியில் குடைசாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நயினாதீவு 08ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதான பாலசிங்கம் விஜயதீபன் என்பவரே ஸ்தலத்தில் கொல்லப்பட்டவராவர்.

சடலம் யாழ். போதனா வைத்தயிசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--