2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாதையும் பாலமும் நாளை திறப்பு

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த், தாஸ்)

மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்திருக்கும் கேரதீவு – சங்குப்பிட்டி பாதையும் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பாலமும் நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

மாகாதேவா தாம்போதி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் புதிய பாலத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய பாலத்தைத் திறந்துவைப்பதுடன் பாதையூடான போக்குவரத்தையும் ஆரம்பித்துவைப்பார்.

இதேவேளை, குறித்த பாலத்தின் நிர்மான பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நேரில் சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--