2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நீர்வேலியில் வயோதிப மாதுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் கிணற்றிலிருந்து வயோதிப மாதுவின்; சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்ட இச்சடலம், கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த சின்னமுத்து நாகம்மாதேவி (வயது 70) என்பவரதென  அயலவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வைத்திய பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--