2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

குடாநாட்டு வன்முறைகளுக்கு ஈ.பி.டி.பி. மீது த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) மீது  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியது.

வடக்கில் சட்டம் ஒழுங்கு முற்றாக சீர்குலைந்து கொலைகள், கடத்தல்கள், கப்பம் வசூலித்தல் உட்பட ஏனைய குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். ஒவ்வொரு சம்பத்திலும் குற்றவாளிகள் தப்பிச்செல்ல முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக வடக்கை சேர்ந்த அமைச்சர் ஒருவரும் ஜனவரி 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்த போதிலும் இதுவரை அரசாங்கத்திடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X