2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யாழ். குடாநாட்டு பொலிஸ் நிலையங்களில் புலனாய்வு அதிகாரிகள் நியமனம்

Super User   / 2011 ஜனவரி 23 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மாவட்டத்திலுள்ள 15 பொலிஸ் நிலையங்களில் புலனாய்வு அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை மற்றும் பலாலி காவல் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய காவல் நிலையங்களுக்கே புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பெரேரா தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை உட்பட்ட முறைகேடுகளை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கே புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X