Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 24 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அமெரிக்காவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவுகள் 1813 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்றீசியா புட்டெனிஸ் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றுகையில் கூறினார்.
யாழ்ப்பாணத் நான்காம் குறுக்குத் தெருவில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமெரிக்க தகவல் நிலையம் திறக்கப்பட்டது.
யாழ் இந்திய துணைத் தூதரக இணைப்பாளர் மகாலிங்கம், சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சுகிர்தராஜ், யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க. யாழ் மேயர் திருமதி பற்குணராசா. சமூக பெரியோர்கள் கல்விமான்கள். பாடசாலை மாணவ மாணவிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அங்கு அமெரிக்கத் தூதுவர் பட்றீசியா புட்டெனிஸ் மேலும் உரையாற்றுகையில், 'யாழ் மக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையில் உள்ள பங்கான்மையை இன்னமும் விரிவடையச் செய்யும் இந்த அற்புதமான நிகழ்விற்கு வந்திருப்பதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
வட மாகாண ஆளுநராகிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் ஆகியோரை நான் மிக விசேடமான முறையில் இங்கே வரவேற்கிறேன். மேலும் யாழ் சமூக செயற்பாட்டு நிலைய இயக்குநராகிய சுகிர்தராஜ் அவர்களுக்கும் நான் எனது நன்றியைக் கூறுகின்றேன். இவர் எமக்களித்த மிகப்பெரும் ஆதரவின் காரணமாகவே 'அமெரிக்க தகவல் கூடம்' இன்று நிறுவப்படுகின்றது.
அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள் என்பதை சிலர் அறியாதிருக்கலாம். அமெரிக்க மிஷனரிகள் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே 1813ம் ஆண்டில் இங்கு வந்திறங்கியவர்களாவர். இத் தொடக்க கால அமெரிக்கர்கள் ஆங்கில மொழியைக் கற்பித்ததோடு தாமே தமிழ் மொழியையும் பயின்று முதலாவது அச்சியந்திரசாலையை இங்கே நிறுவிஇ முதல் தமிழ் செய்தித்தாளையும் ஆரம்பித்ததோடு இலங்கையிலேயே முதன் முதலானதாக ஒரு மருத்துவக் கலாசாலையையும் நிறுவினர்.
கடந்த யூன் மாதம் நான் முதன் முதலாக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இங்கே உடுவில் நகரில் அநேக அமெரிக்கர்கள் துயில் கொள்ளும் ஒரு கல்லறைத் தோட்டத்திற்கு விஜயம் செய்தேன். அப்போது ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் மிகப் பிரபலமான இராஜதந்திரியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமாகிய ஜோன் பொஸ்டர் டல்லஸ் அவர்கள் இங்கு வந்து தமது பூட்டியாராகிய ஹரியட் வின்ஸ்லோ அம்மையாரின் கல்லறையைத் தரிசித்ததாகக் கேள்விப்பட்டேன். இவ்வம்மையார்தான் உடுவில் மகளிர் கல்லூரியை நிறுவியவர்.
இப்பாடசாலையின் பாடற்குழுவினர்தான் முன்னர் இவ்வைபவத்தில் பாடல் இசைத்தவர்களாவர். இதுவே ஆசிய கண்டத்தில் நிறுவப்பட்ட முதல் வதிவிட வசதி கொண்ட பாடசாலையாகும்.
'அமெரிக்க தகவல் கூடம் திறக்கப்படுவதானது நாம் யாழ் மக்களோடு கொண்டுள்ள தளராது தொடரும் அர்ப்பணத்தின் ஒரு அடையாளமாகும். இத் திறப்பு வைபவத்தோடு நாம் இன்னொரு அமெரிக்க 'முதல்' காரியத்தை சாதித்து வைக்கிறோம். அதாவது 'அமெரிக்க தகவல் கூடம்' தான் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதல் யுனுளுடு இணைய இணைப்பு கொண்ட நிலையமாகும்.
'அமெரிக்க தகவல் கூடம்;' என்பது வெறுமனே புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் அன்றாட செய்தித்தாள்களையும் வாசிப்பதற்காக மக்கள் கூடும் ஒரு சிறு நூல் நிலையத்தையும் விட மேலான ஒன்றாகும். 'அமெரிக்க தகவல் கூடம்;' யாழ்ப்பாணத்தை இலங்கையின் இதர பிராந்தியங்களோடும் பரந்த உலகத்தோடும் இணைக்கும் ஒரு நிலையம். எண்ணிம (டிஜிட்டல்) தொலைக்காட்சி கலந்துரையாடல்கள் வழியாக யாழ் குடிமக்கள் இப்போது நியூயோர்க், லொஸ் ஏஞ்சலஸ், வாஷிங்டன் டி.சி. ஆகிய நகரங்களிலுள்ள அமெரிக்க கல்விமான்களுடனும், வியாபார பிரமுகர்களுடனும் கலந்துரையாட முடியும்.
இது போன்றதொரு இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் நாம் இப்போது கலந்து கொள்வதுபோல் இலங்கை முழுவதுமுவுள்ள பல்கலைக்கழக வலையமைப்புக்களுடனும், கண்டி, ஒலுவில்இ கொழும்பு ஆகிய நகர்களில் உள்ள எமது 'அமெரிக்க தகவல் கூடங்களுடனும் நீங்கள் இணைந்து கொள்ளலாம் என்பதே.
நாம் இளைஞர்களை இணையம் மற்றும் இணைய அலைபரப்பு, கணினி நிரலமைப்பு வாயிலாக தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ திறன்களை அபிவிருத்தி செய்திட முனைவோம். இணையத்தில் கிடைக்கப்பெறும் தரவு தளங்கள், ஆங்கில மொழி நூலக சேகரிப்புக்கள், வழமையான புத்தக குழுக்கள், திரைப்பட நிகழ்வுகள் முதலியவை பள்ளி மாணவர்களுக்கும் வளர்ந்தோருக்கும் கல்வி மற்றும் கலாசார மூலவளங்களாக அமையும். 'அமெரிக்க தகவல் கூடம்' விரைவிலேயே உயிரூட்டமுள்ள சமூக நிலையமாக உருவாகி இலங்கையரும் அமெரிக்கர்களும் உரையாடும் ஓரிடத்தினைப் பெற்றுத் தரும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
யாழ்ப்பாண 'அமெரிக்க தகவல் கூடம்' ஐக்கிய அமெரிக்க இராச்சியம் யாழ் மக்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கமான உறவுகளின் ஓரம்சமாகும். USAID எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகாமைத்துவ நிறுவனமானது 20,000 முழு நேர தொழில் வாய்ப்புக்களை வடகிழக்கில் தனியார் நிறுவனங்களுடனான ஒரு புத்தாக்கமான பங்கேற்பு முயற்சியினால் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் நாம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும்இ அரங்கக் கலைகளை மேம்படுத்தவும், இல்லங்களில் ஏற்படும் வன்முறைகளைக் களையும் செயற்பாடுகளுக்கும் பல சிறு மானியங்களை வழங்கியுள்ளோம். என்னுடைய சேகரித்த புத்தகங்களில் சில மர்ம நாவல்களை நான் யாழ் வாசிகசாலைக்கு பரிசளித்துள்ளேன்.
சமூக மட்ட ஆதரவு கொண்டதும் இளைஞர் மத்தியில் முயற்சிகளை மேற் கொண்டுள்ளதுமான யாழ் சமூக செயற்பாட்டு நிலையம் எம்மோடிணைந்து பங்களிக்க மிகவும் சிறப்பானதொரு அமைப்பாகும். முழு யாழ் சமூகத்தாருக்குக் கலாச்சார மற்றும் கல்வித்துறை மூலவளங்களை வழங்குவதற்கும் நாம் இவர்களோடு நெருக்கமான ஒத்துழைப்பை நாம் தரமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இன்றைய திறப்பு வைபவத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். யாழ் நகரில் அமெரிக்க செயற்பாடுகளின் வலுவானதொரு பாரம்பரியத்தினை தொடர விழையும் 'அமெரிக்க தகவல் கூடத்தின்' செயற்பாடுகளை வருங்காலத்தில் நான் தொடர்ந்தும் அவதானித்து வருவேன்" ' என்றார்.
25 minute ago
33 minute ago
54 minute ago
Aruntha Tuesday, 25 January 2011 04:17 PM
உங்கள் முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள். மேலும் யாழ் சமூக செயற்பாட்டு மையம் முன்னேற்ற பாதையில் வளர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago