2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வியாழக்கிழமை ஐ.தே.க. பிரசார ஆரம்பம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக யாழ். மாவட்டத்திற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை வரவுள்ளானர்.

யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளின் முதல் கட்;டமாக ஜக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் கருஜெயசூரிய, செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் பொருளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சமூகம் தரவுள்ளனர்.

வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் காலை 10.00 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் இடம்பெறும் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து பொதுமக்களுடனான சந்திப்புகளும் பிரசாரங்களும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் யாழ். மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .