2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோப்பாயில் கொள்ளை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாய் வடக்கு பகுதியில் பட்டப்பகலில் ஆட்களில்லாத வீடொன்றில் புகுந்த திருடர்கள் தங்க நகைகள், கைத்தொலைபேசிகள் உட்பட பல பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை நண்பகல் கோப்பாய் வடக்கு நாவற்கட்டையிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயும் இரு மகள்களும் மாத்திரம் வசிக்கும் இவ்வீட்டில் மூவரும் வெளியே சென்றிருந்ததை அறிந்த திருடர்கள்- வீட்டின் பின்புறக்கதவை உடைத்து உள்ளே சென்று சகல இடங்களையும் ஆராய்ந்து அங்கிருந்த தங்கச்சங்கிலி, காப்பு, மோதிரம் போன்ற நகைகளையும் கைத்தொலைபேசியையும் மேலும் பல பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .