2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழில் தேசிய வியாபார முகாமைத்து நிறுவனத்தின் கிளை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யாழிலிருந்து ஆர்.சேதுராமன்)

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தின் நான்காவது கிளை யாழ்ப்பாணத்தின் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இளைஞர் விவகார வாழ்க்கைத்திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகபெரும, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்நிறுவனத்தில் ஆங்கிலம், கணினி மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன. யாழில் தற்சமயம் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தில் ஒரு வருட கற்கைநெறியை தொடர்வதற்காக 350 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

குருநாகல், கண்டி, காலி ஆகிய இடங்களில் ஏற்கனவே இந்நிறுவனத்தின் கிளைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .