2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாநகர சபையில் கடும் வாக்குவாதம் :முதல்வர் எழுந்து சென்றார்

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகர சபையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தினால் யாழ்.மாநகர சபை முதல்வர் எவ்வித அறிவித்தலும் விடுக்காமல் எழுந்துச் சென்றார்.

இன்று காலை ஆரம்பமான இக் கூட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையில் வாக்கு வாத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சபை ஆரம்பமானவுடன் யாழில் கட்டப்படவுள்ள 5 மாடி கட்டிடங்கள் தொடர்பாக ஊடகங்கள் பிழையான தகவலை வழங்குவதாக யாழ். மாநகர சபை முதல்வர் கருத்து வெளியிட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உரையாற்றிய போதே இவ் வாக்கு வாதம் இரு தரப்புக்குமிடையில் ஏற்ப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .