2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வடக்கிலிருந்து பெருமளவு நுங்கு எடுத்துச் செல்லப்படுவதாக விசனம்

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு பெருமளவு நுங்குகள் எடுத்துச் செல்லப்படுவதால் இவ் ஆண்டிற்க்கான பனம் விதைகளின் தொகை பெருமளவில் வீழ்ச்சியடையும் என பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், வரணி, பளை, பூனகரி, இயக்கச்சி ஆகிய பகுதிகளில் இருந்தே பெருமளவு நுங்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

தென்பகுதியில் இருந்து வடக்கே வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் இந் நுங்குகளை எடுத்துச் செல்கிறார்கள்.

கடந்த காலங்களில் வடக்கில் நடைபெற்ற போரின் காரணமாக பெருந்தொகையான பனைகள் அழிவடைந்து விட்டன. இந் நிலையில், பெருமளவு நுங்கு வெட்டப்படுவது பாதிப்பையே ஏற்படுத்தும் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X