2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன்,  மற்றுமொருவர்  படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம்,  சாவகச்சேரி பெரிய மாவடிச் சந்தியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்து வந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காரொன்றுடன்  மோதி விபத்திற்குள்ளானது.  

மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து வந்த நபரான சாவகச்சேரி மாவடியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 50) என்ற குடும்பஸ்தரே விபத்தில் பலியானவர் ஆவார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபரான சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த சிவபாதம் கிரிதரன் (வயது 34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .