2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை ஆரம்பம்

Kogilavani   / 2011 ஜூன் 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)


யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது.

தனது முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளதுடன் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அறிமுகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X