2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

யாழில் சிறந்த கிராம சேவையாளருக்கு விருதுகள்

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் சிறந்த கிராம சேவையாளர்களுக்கான 'ஹேமலதா செல்வராஜா' ஞாபகார்ந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, இ.எயுயீன் மசனட், பா.லலித் மற்றும் சு.பூபாலசிங்கம் ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நவாலி சென்பீற்றர் விமானத்தாக்குதலின்போது கடமையிலிருந்த நிலையில் நவாலியூரைச் சேர்ந்த செல்வி ஹேமலதா செல்வராஜா உயிர்நீத்தார். இவரது சேவையை நினைவு கூர்ந்தே இவ்விருது வழங்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X