2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சேவைகள் சுகாதரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் நுளம்பைக் கட்டுப்படுத்தும் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சிமன்றச் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோரைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .