2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

யாழில் இராணுவ அராஜகம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்: த.தே.கூ.கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தை இராணுவ மயமாக்கி மக்களை அழித்தொழிக்கலாம் என இராணுவம் நினைக்கின்றது. யாழில் இராணுவமயமாக்கம் என்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, தழிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக திட்டமிட்ட இராணுவ அராஜகம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிக் கொண்டு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் அப்போது தான் ஜனநாயக சூழல் உருவாகும். யாழ்ப்பாணத்தில் தான் நினைத்ததை இராணுவம் செய்யும் என்றால் மக்கள் எவ்விதம் நிம்மதியாக சுகந்திரமாக வாழமுடியும்.

தமிழ் மக்கள் இராணுவ அராஜகத்தில் இருந்து விடுபட்டு சுகந்திரமாக வாழக்கூடிய சூழல் யாழ்ப்பாணத்தில் இல்லை. இராணுவ அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு எவ்விதம் சுகந்திரமான தேர்தலை நடத்தமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவரைத் தொடர்ந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில், வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தழிழ் மக்கள் வெளியில் வந்து வாக்களிப்பதைத் தடுக்கும் அரசின் செயற்பாடாகவே நாம் இதைக் கருதுகின்றோம். இராணுவம் தமிழ் மக்களைத் திட்டமிட்டு அவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

அத்தோடு தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழக்கூடாது என்ற நிலைப்பாட்டுடன் இராணுவம் நடந்து கொள்கின்றது. இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் கேள்ளி எழுப்பவுள்ளோம் என்றார். இதேவேளை, குறுக்கிட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இராணுவத்தினரின் அடாவடிகளுக்கு எதிராக சட்டத்தை நாம் கையில் எடுக்கவுள்ளோம் என்றார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸார் நடந்த சம்பவங்களையும் எமது வாக்கு மூலங்களையும் அறிக்கையாக நீதிமன்றில் இன்றைய தினம் சமர்ப்பித்துள்ளனர். அத்தோடு எம்மைத் தாக்கிய எம்மோடு பேசியவர்களை நாம் நீதிமன்றுக்கு அடையாளம் காட்டவுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்பாத்துரை விநாயகமூர்த்தியைத் தவிர மற்றைய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .