2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழில் நீரினால் பரம்பலடையும் நோய்த்தாக்கம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களினாலும் தூய்மையற்ற குடிநீரினாலும்  வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக  யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள  பெரும்பாலான உணவுவிடுதிகளில் சுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் அவற்றை உண்பதினால் நோய்களின் பரம்பல் அதிகரிக்கும் என்ற ஜயப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இந்த நோய்த் தாக்கங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .