2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அழகுபடுத்தப்படும் யாழ். புல்லுக்குளம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்,கவிசுகி)

யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளத்தை ஆழமாக்கி அதனை அழகுபடுத்தும் இரண்டாம் கட்ட பணி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏற்கெனவே புல்லுக்குளத்தை தூய்மைப்படுத்துவதற்கான  சிரமதானப் பணிகள் நடைபெற்றிருந்த நிலையில், இன்று அக்குளத்தை ஆழமாக்கி அதனை அழகுபடுத்தும் இரண்டாம் கட்ட பணி இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 4.312 மில்லியன் நிதியொதுக்கீடு செய்துள்ளது.

இன்றைய நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ். .நகரின் மத்தியில் அமைந்துள்ள புல்லுக்குள நீர்த்தேக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதாக வடமாகண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புல்லுக்குள நீர்த்தேக்கப்பகுதியில் சுற்றுலாத்தல செயற்றிட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கையை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வசிப்போர், அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தமது ஒய்வு நேரத்தைக் கழிப்பதற்காக தீவு வடிவில் பூங்கா அமைக்கப்படவுள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X