2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மாபெரும் விவசாயக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 14 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் மீளக்குடியேறிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான உதவிகளை வழங்கி வந்த இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நிகழ்வொன்று யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

யாழ். விவசாயத் திணைக்களத்தினால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி மாபெரும் விவசாயக் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் தென்பகுதி விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களும் அவர்களின் தொழிநுட்பம் சார் விளக்கங்களும் நடைபெறவுள்ளன.

இன்றைய நிகழ்வில் யாழ். பல்பலைக்கழக விவாசாயபீட பீடாதிபதி போராசிரியர் சறோஜினி சிவச்சந்திரன், விவாசாயபீட உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் பேராசிரியர் மிகுந்தன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--