2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

'யாழ் தேர்தலை கண்காணிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவினரை அனுப்ப வேண்டும்'

Super User   / 2011 ஜூலை 14 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகஸ்தர்களை அனுப்ப வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்வதாகவும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று வியாழக்கிழம தெரிவித்தார்.

'இந்தத் தேர்தல் ஒரு தேசிய தேர்தல் போன்ற தன்மையை பெற்றுவருகிறது. இத்தேர்தல் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான யாழ் மக்களின் கருத்தை அளவிடுவதற்கான ஓர் அக்னி பரீட்சையாகும். இது ஒரு மினி தேர்தலாக இருந்தபோதிலும் அரசாங்கத்திற்கு மேலும் முக்கியமானதாகும்.

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாமல் இருப்பது குறித்து ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து நாம் பல முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம். சூழ்நிலையை கண்காணிப்பதற்காக அங்கு ஒரு குழுவை அனுப்புமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நாம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். நாமும் அங்கு விசேட குழுவொன்றை கண்காணிப்பில் ஈடுபடுத்துவோம்' என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--