Suganthini Ratnam / 2011 ஜூலை 15 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைநகர் நீலங்காடு நீலங்கிரி மயானம் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் நீலங்காடு நீலங்கிரி மயானம் 1986ஆம் ஆண்டு முதல் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றது. இதனால் காரைநகரின் பலகாடு, நீலங்காடு, தோப்புக்காடு, மடத்துவளவு, கருங்காலி, களபூமி போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்றே சடலங்களை தகனம் செய்து வந்தனர்.
அத்துடன், தனியார் காணியொன்று மயானமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து காரைநகர் கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடிதன் பயனாக இம்மயானம் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளதாக அவர் கூறினார்.
8 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
13 Dec 2025
13 Dec 2025