2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தேர்தல் பிரசாரத்துக்காக இரா.சம்பந்தன் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் சூறாவளிப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யாழ். உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

யாழ். உள்ளூராட்சி சபைகள் அனைத்தையும் கைப்பற்றும் நோக்கில் பாரிய பிரசார நடவடிக்கைகள் தற்போது கிராமம் கிராமமாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--