2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'சிட்டு' மாதச் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)
யாழ்ப்பாணம் துவாரகா வெளியீட்டகத்தினரால் புதிய சிட்டு என்ற மாதச் சஞ்சிகை வெளியீடு யாழ் திருமறைக் கலாமன்ற கலைத்தூது அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவிகள் நூலின் அறிமுக நிகழ்வினை நடாத்தினர். இரண்டாவது அமர்வு திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இன்றைய சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் என்ற கருப்பொருளில் பேராசிரியர் எஸ்.சிவநாதன், உலகலாவிய ரீதியில் சிறுவர் இலக்கியமும் ஈழத்து சிறுவர் இலக்கியமும் என்னும் கருத்துரையில் வல்வை ஆனந்தராஜா, சிறுவர்களின் உலகம் என்னும் கருத்துரையில் திருமதி பாகீரதி கணேசதுரை, சிறுவர் இலக்கியமும் உளவியலும் என்னும் கருத்துரையில் ஜோசப்பாலா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

சிட்டு சிறுவர் சஞ்சிகையானது மாதம் இரு முறை வெளிவரவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--