Suganthini Ratnam / 2011 ஜூலை 18 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்,ஞானசெந்தூரன்)
யாழ். அச்சுவேலி வல்லை வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.
அச்சுவேலி தெற்கு மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மகாலிங்கம் தமிழ்மாறன் (வயது 26) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
மதுபோதையில் காணப்பட்ட இவர்கள் இருவரும் வடமராட்சியில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றை பார்த்து விட்டு நேற்று நள்ளிரவு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் வீதியிலுள்ள மின்கம்பமொன்றுடன் மோதுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.(படப்பிடிப்பு:-ஞானசெந்தூரன்)
21 minute ago
35 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
57 minute ago
1 hours ago