2021 மே 08, சனிக்கிழமை

பேராசிரியர் ந.சண்முகலிங்கனின் 'ஆத்மா' இசை இறுவட்டு வெளியீடு

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியரும் முன்னாள் துணை வேந்தருமான ந.சண்முகலிங்கனின் 'ஆத்மா' என்ற இசை இறுவட்டு வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைகழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் தலைமை உரையினை பேராசிரியர் சிவலிங்கராஜாவும் ஆசியுரையினை பரமேஸ்வரன் ஆலய பிரதம குருக்களும் வழங்கினார்.

இறுவட்டின் விளக்கவுரையினை சமூகவியல் துறை விரிவுரையாளா ராஜேஸ் கண்ணாவும் நயப்புரையினை பாலசண்முகனும் ஆற்றினர். இந்த இறுவட்டின் முதற் பிரதியை நகுலேஸ்வரி பண்பாட்டு நிறுவன தலைவர் எ.நாகலிங்கம் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X