2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'யாழ்ப்பாண வாழ்வியல்' கண்காட்சி இன்று ஆரம்பம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,கிரிசின்)
யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாண வாழ்வியல்' எனும் தலைப்பிலான பொருள்  கண்காட்சி  இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க பிரதம அதிதியாகவும் யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் போரசிரியர் வசந்தி அரசரட்ணம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

யாழ். குடாநாட்டின் புராதன குடிகள், புராதன குடியிருப்புகள், வாழ்வியல் முறைமைகள், குடிப்பரம்பல் ஆகியவற்றிற்கு இன்றளவில் உள்ள தொல்லியல் சான்றுகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி காணப்படுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .