2021 மே 10, திங்கட்கிழமை

ஊழல்கள் நிரூபிக்கப்படுமாயின் உடன் விலகுவேன் : யாழ்.நகர முதல்வர்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
'எனது ஊழல்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுமாயின் மாநகர முதல்வர் பதவியில் இருந்து உடன் விலகுவேன்' என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோயேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 9 ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்.மாநகர சபையின் நிதி நிலமைகள், பாகுப்பாய்வு , வருமானங்கள் செலவீனங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கும் தேவை தமக்கு  ஏற்பட்டு இருப்பதாகவும் தான் மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் ஊழல் செய்து இருந்தால் அதனை ஆதாரங்களுடன் சபையில் நிரூபிக்கலாம் என சபை உறுப்பினர்களுக்கு அவர் சவால் விட்டுள்ளார்.

ஊழல் செய்ய வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர் யாழ்.மாநகர சபையின் நிதி நிலமைகள் பற்றி தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X