2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதிக்கான குடிநீரை பவுசர்கள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளான  துண்டி, வளன்புரம், கொழும்புத்துறை, கொட்டடி, நாவாந்துறை ஆகிய பகுதிகளுக்கே பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ். மாநகரசபையினால் நீர்ப்பம்பிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் சில பகுதிகளில் நீர்;ப்பம்பிகள் திடீரென பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக தொடர்ந்து  ஒழுங்கான முறையில்  குடிநீர் விநியோகிக்க முடியாதுள்ளது.

யாழ். மாநகரசபை முதல்வர்  யோகேஸ்வரி பற்குணராசாவின் விசேட பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--