2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழில் ஊர்வலம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஊர்வலமொன்று நடைபெற்றது.

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்றலிலிருந்து ஆரம்பமாகி சுன்னாகம் நகரத்தை சுற்றிவந்த பின்னர் மீண்டும் காங்கேசன்துறை வீதி வழியாக சென்று சபாபதிப்பள்ளை வீதியூடாக வாழ்வகத்தை சென்றடைந்தது.

இதில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார பிரதம விருந்தினராகவும் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் செ.குமதரவேலு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X