2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபர் தண்டம் செலுத்தி விடுதலை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

350 கிராம் கஞ்சாவை தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  நபரொருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் அத்தண்டப்பணத்தை செலுத்தி விடுதலையாகியுள்ளார்.

 யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கஞ்சாவை தனது உடைமையில் வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில்  யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராசா, மேற்படி நபரிற்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். இத்தண்டப்பணத்தை குறித்த நபர் கட்டத் தவறின் 2 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த நபர் தண்டப்பணத்தை கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .