2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

யாழ். புராதன ஒல்லாந்தர் கோட்டையின் புனரமைப்பு பணிகள் துரிதம்

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். புராதன ஒல்லாந்தர் கோட்டையின் புனரமைப்பு பணிகள் துரிதமடைந்து வருவதாக தேசிய மரபுரிமை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் 104.5 மில்லியன் ரூபா நிதியுதவியின் மூலம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறன.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். கோட்டை புனரமைப்புப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையவுள்ளது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ். புராதன ஒல்லாந்தர் கோட்டை பாதுகாப்புச் செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளில் வெளிநாட்டு கட்டிட நிர்மாண பொறியியலாளர்கள் மற்றும் உள்ளூர் கட்டிடக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X