2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழ். நகரப்பகுதி வெள்ளநீரை கடலுடன் சேர்க்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் பருவமழை ஆரம்பித்துள்ளதால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறதை, யாழ்.மாநகர சபையினர் அவற்றை அகற்றுவதற்கு இன்று வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். நெடுங்குளம், கோவில் வீதி, இந்துக்கல்லூரி வீதி, வண்ணார்ப்பண்ணை மெதடிஸ் திருட்சபைக்கு அருகாமையில் செல்லும் வாய்க்கால் ஆகிய இடங்களில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து அவர்கள் குடியிருக்க முடியாத ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவ்விடங்களுக்கு நேரடியாக சென்று வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் நீரை பக்கோ இயந்திரம் மூலம் கடலுக்குள் செலுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மராமரத்துப் பகுதியினருக்கு பணிப்புரை வழங்கியதைத் தொடர்ந்து அவ்விதம் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடத்துள்ளார்.

துப்புரவு செய்யப்படாத வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் மழை வெள்ளம் மக்கள் மக்கள் குடியிருப்பு ஆரம்பிக்கப்படாத காலத்தில் நெடுங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்ட்ட மண் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய கிடங்குகளில் தேங்கி நிற்கும் வெள்ளம் ஆகியனவே மக்கள் வீடுகளுக்குள் புகுந்து அசௌகரிய நிலையை ஏற்படுத்தி வருகின்றது என யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .