2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் யாழ்.ஆயர் கோ

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்ட ஜரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியிடம்  தான் கோரியதாக   யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயம் ஆண்டகை யாழ். தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதி ஜென்ரினஸ் கிறிஸ்ரி ,  இன்று சனிக்கிழமை காலை யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஆயர் மேலும் தெரிவித்ததாவது,

'சண்டை முடிந்துள்ளது, அமைதியாக இருக்கின்றோம். அமைதியாக எங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு போகிறதற்கு முயற்சிக்கின்றோம். அரசாங்கம் முன்னேற்றத்திற்காக சில சில காரியங்களைச் செய்து வருகிறது. நீண்ட காலமாக செய்யப்படாத காரியங்களைச் செய்து வருகின்றனர்.

என்றாலும் எங்களுக்கு மனதில் ஒரு துக்கமும் இருக்கிறது. அந்தத் துக்கம் என்ன வென்றால் இதுவரையும் எந்த அரசியல் தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை. நாங்கள் விரைவில் எதிர்பார்பதும் அரசியல் தீர்வுதான். அப்போதுதான் மக்களுக்கு மனதில் சந்தோசம் ஏற்படும்.

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இந்த நாட்டில் பிறந்து வளந்தவர்கள் பெரும்பான்மை நாங்கள் நீங்கள் சிறுபான்மை என்ற வித்தியாசத்தை விட்டுப் போட்டு நாங்களும் அவர்களுக்கு சமனானவர்களாக இந்த நாட்டில் நடத்தப்பட வேண்டும். எங்களுக்கு என்று சம உரிமை இருக்கிறது.

எமது மொழி, பண்பாடு, கலாச்சரம் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாங்கள் சமனாக வாழ்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும்' என்றார்.

தனது பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய  நாடாளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி ஜென்ரினஸ் கிறிஸ்ரி கருத்துத் தெரிவிக்கையில்,

'யாழ்ப்பாணத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசு முன்னெடுத்துவரும் அபிவிருத்தி மற்றும் மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எவ்விதமான திருப்திகளைக் கொடுத்திருக்கிறது என்பதை நேரில் அறிவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன்' என்றார்.

'மக்களின் மனநிலையில் அமைதி நிலவுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தின் தற்கால நிலவரங்கள் தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவையும், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தையும் மற்றும் சமூகப்பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.

இவர்களிடம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஜரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியத்திடம் தொரிவிக்கவுள்ளேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0

  • ummpa Sunday, 27 November 2011 08:11 PM

    நாங்கள் இன்னமும் மடையர்கள் . மூன்று தசாப்தகாலங்களாக இப்படியான நடிகர்கள் வருவார்கள் போவார்கள் இறுதியில் என்ன நடக்கும். ஒன்றுமே நடக்க ஒருவர் மற்றவரை விடமாட்டார் எனவே நமது பிரச்சினை நமக்குள் தீர்வு காண நமது மூளைப்பலம் மட்டும் தான். உதவும் அதக்கு முழுப்பலத்தையும் பயன்படுத்தி நமது பிள்ளைகளை பல்வேறுதுறைகளில் எங்கெல்லாம் முதலீடு , வேலைத்தளங்கள் மற்றும் இடங்களை நிரப்புங்கள். பின்னர் நம்மை தேடி வரும் எல்லாம். எனவே சகோதர்களே நாம்தான் நமக்கு என்று வாழ்வோம். எல்லாப் பிரச்சினைகளும் தீரும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .