2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

யாழில் மூலதனச் சந்தை முதலீடு தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் மூலதனச் சந்தை முதலீடுகள் தொடர்பான அறிவை அபிவிருத்தி செய்யும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

முதலீட்டாளர் நிகழ்வையொட்டி நடைபெறும் இக்கருத்தரங்கில் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இலங்கையிலுள்ள முதலீட்டுச் சந்தையுடன் தொடர்புடைய பங்குத்தரகர் நிறுவனங்கள், நம்பிக்கை அலகு நிதி முகாமைத்துவக் கம்பனிகள், சந்தை இடையீட்டாளர்கள் தமது சேவைகள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

பங்குச் சந்தை தொடர்பான அறிவைப் பெறவிரும்புவோர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையின் இணைப்பாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X