2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

போரில் பாதிக்கப்பட்ட யாழ். மக்களுக்கான வீடமைப்பு திட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் யாழில். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை அமைத்துகொடுப்பதற்கு பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதித் தூதுவர் ரொபி விலியோஜ் தன்னிடம் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவ அதிகாரிகளுக்கும் யாழ்.அரச அதிபருக்குமிடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவிக்கையில்,

உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்தும், அவர்கள் மீள்குடியேற்றிய பின்னர் அவர்களின் தேவைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்திய வீட்டுத்திட்டம் தாமதம் ஏற்படுவதற்கான கராணம் குறித்தும் பிரித்தானிய தூதுவராலய பிரதிநிதிகள் கேள்ளி எழுப்பினர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் யாழில். அதிகரித்திருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் அவர்கள் கேட்டறிந்துக்கொண்டனர்.

மக்களின் நீண்டகால இடப்பெயர்வு, மக்களின் வாழ்வதாரம், விதவைகள், வலுவிழந்தவர்கள், முன்னாள் போராளிகளின் நிலைமைகள் தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது அவர்கள் கேட்டறிந்துகொண்டனரென அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .