2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மீள்குடியேறிய மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: யாழ்.அரச அதிபர்

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (சுமித்தி)
20 வருடங்களின் பின்னர் சுழிபுரம், பொன்னாலை பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 639 குடும்பங்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்ய விண்ணப்பித்த 639 குடும்பங்களில் 2219 உறுப்பினர்கள் அடங்குகின்றார்கள்.

இவர்கள் 5 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆரம்ப தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

குறித்த  பிரதேசங்களில் காடுகள் அழித்தல், குடிநீர் வசதிகள் போக்குவரத்து வசதிகள், உணவுகள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன சங்கானை பிரதேச செயலாளர் ஊடாகவும் வழங்கப்படடுள்ளன.

மீள்குடியேற்ற பகுதிகளில் காடுகள் அழித்தல் போன்ற சுத்திகரிப்பு பணிகளில் கடற்படையினரின் உதவியுடன் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டு  வருகின்றனர்.

அத்துடன், சிதைவடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இருப்பிடமற்றவர்களுக்கு இருப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .