2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யாழ். சரசாலையில் தும்பு தொழிற்சாலை திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யுத்தத்தினால் சேதமடைந்த சரசாலை தும்பு தொழிற்சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் தும்பிற்கான கேள்வி குறைவடைந்துள்ளதுடன், தும்பிலான பொருட்களும் குறைவடைந்துள்ளன.

தும்பு குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இத்தும்பு தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தும்புத்தடி, தும்பிலான பொருட்கள் தயாரிப்பதற்கு ஊர் மக்களிடம் பனம் மட்டைகள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

கடந்த யுத்த காலத்தின் போது முற்றாக சேதமடைந்த இத்தும்பு தொழிற்சாலையில், எதிர்காலத்தில் அப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .