2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

யாழிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் தனியார் பஸ்கள் பணிபகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழிலிருந்து வவுனியாவுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் நடத்துனரும் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளை முந்திக்கொண்டு ஏற்றுவதில் திருகோணமலை மற்றும் வவுனியா தனியார் பஸ் சாரதிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  இன்று காலை யாழிலிருந்து வவுனியாவிற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸை வழிமறித்த பொலிஸார் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்ஸின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் விடுவிக்ககோரி யாழ். தனியார் பஸ் சாரிதிகளும் நடத்துனர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்பணி பகிஷ்கரிப்பினால் யாழ். மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, கொழும்பு போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .