2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மாபிள் விழுங்கிய குழந்தை மரணம்

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மாபிள் விழுங்கிய குழந்தை மூச்சுத் திணறி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அளவெட்டி டச்சு வீதி பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை வயதான குலேந்திரன் அருள் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

மாபிளை விழுங்கிய குழந்தை மூச்சு திணறுவதை கண்ட தாயார் அளவெட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்க கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .