2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அனுமதி பத்திரமில்லாத தனியார் பஸ்களின் சேவைக்கு தடை விதிப்பு: ஹேமுனு

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


அனுமதி பத்திரமின்றி செலுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹேமுனு விஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுடான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தனியார் பஸ்களுக்க அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட வழி தரிப்பிடங்களில் மாத்திரமே பஸ்களை நிறுத்த முடியும். அவ்வாறு அனுமதி பத்திரத்தில் நிறுத்தப்படாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பஸ்களுக்கான சுற்று நிரூபம் தலைவரினால் வெளியிடப்பட்டது. இச்சுற்று நிரூபம் பொலிஸாரின் ஊடாக பஸ்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. முதல் 2 வாரங்களுக்கு சுற்று நிரூபம் குறித்து பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது.

அறிவுறுத்தலின் பிரகாரம் பஸ் உரிமையாளர்கள் வழிப்பாதை சட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். பஸ் உரிமையாளர்கள் பொலிஸாருடன் முரண்படாது சமாதானமாக கடமையாற்ற வேண்டும். யாராக இருந்தாலும் சட்டத்தினை மதித்து நடக்க வேண்டும். சட்டத்திற்கு எதிராக நடக்க முடியாது. தனியார் பஸ் உரிமையாளர்கள் மேலதிகமாக பஸ்களை கொள்வனவு செய்ய வேண்டாம்.

யாழ். மாவட்டத்தில் தேவைக்கு அதிகாமான பஸ்கள் இருப்பதால் போக்குவரத்து நேர கணிப்புக்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

பஸ் உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது, அவற்றை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய கால நேரங்கள் ஏற்படுகின்ற போது, பஸ் உரிமையாளர்கள் மீது மாவட்ட செயலாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற போது, பஸ்ஸினை இடை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே, பஸ் உரிமையாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பஸ்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளும் போது 3 நாட்கள் அல்லது 2 வாரங்கள் அதிகமாக இருக்கின்றது. அதற்கு மேலாக எடுத்தால் அல்லது அதற்கான தீர்வுகள் கிடைக்காவிடின், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்ய முடியும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், தீர்வுகள் கிடைக்காவடின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைளும் எடுக்கலாம். அதற்காக பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு தாம் செய்தவை சரி என்று எடுத்துக் கொள்ளகூடாது.

அத்துடன், பஸ் உரிமையாளர்கள் சீருடை அணிவதும் பஸ்களுக்கு உரிய வர்ண பூச்சினை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். அதற்கான ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும். சீருடை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
               
இந்த கலந்துரையாடலில், காங்கேசன்துறை சிரேஷ்;ட பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி பெரேரா, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரணவீர, யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .