2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

வல்வெட்டித்துறையில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடி?

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே இந்த புலிக்கொடி பறிக்கவிடப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த புலிக்கொடியை அவ்விடத்திலிருந்து அகற்றியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவுத்தூபியொன்றே அமைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட நிலையிலேயே தனியார் தொலைக்தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், தாங்கள் அவ்வாறானதொரு புலிக்கொடியை அங்கிருந்து அகற்றவில்லை எனவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .