2021 மே 12, புதன்கிழமை

சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தை தடைசெய்யவும்: டக்ளஸ் தேவானந்தா

Kogilavani   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
நிரந்தர வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தினை தடைசெய்யுமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
யாழ். வர்த்தக சமூகத்தினருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'உரிமை மாற்றம்' தொடர்பிலான இந்த கலந்துரையாடல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மாநகர சபையின் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிமை மாற்றத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மட்டுமன்றி அதனை சட்டமாக்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு நிரந்தர உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்;' என்றார்.
 
இந்த கலந்துரையாடலின் போது  நடைபாதை வியாபாரிகளின் அத்துமீறிய வியாபார நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தகர்களினால் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, 'வெளிமாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் தடைசெய்யப்படும'; என்றார்;.
 
இந்த கலந்துரையாடலில், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர பிரதி முதல்வர் ரமீஸ், மாநகர ஆணையாளர் பிரணவநாதன் உட்பட வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .