2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெலிகந்தையில் யாழ். பல்கலை மாணவர்களுடன் பீடாதிபதிகள் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, 'தாம் எப்போது இந்த இடத்தில் இருந்து வெளியில் வருவோம் என எதிர்பார்த்து காத்திருப்பதாக' மேற்படி மாணவர்கள் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட பீடாதிபதியொருவர் தெரிவித்தார்.

உளவளத்துணை எப்போது முடியுமென்றும் மாணவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு உரிய அதிகாரிகள் அங்கு இருக்கவில்லை என்று மேற்படி பீடாதிபதிகள் மேலும் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .