2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வைத்தியர் திருமாறன் கொழும்பிற்கு இடமாற்றம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் தற்காலிக இடமாற்றம்பெற்று கொழும்பிற்கு சென்றுள்ளதாக யாழ். அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் இன்று தெரிவித்தார்.

மேற்படி வைத்தியர் கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் கந்தர்மடம் சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானர்.

இந்நிலையில் வைத்தியரின்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு கோரி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கடந்தவாரம் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அரச வைத்திய சங்கத்தின் தாய் சங்க தலைவர் மஹிபால நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொணடு வைத்தியர்கள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மனம் எட்டப்பட்டுள்ளதாக வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, வைத்தியரின் குடும்பத்தினர் கொழும்பில் வசிப்பதனால் 3 மாதத்திற்கு தற்காலிக இடமாற்றம் வழங்குமாறு வைத்தியர் திருமாறன் கேட்டதற்கு இணங்க கொழும்பிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய சங்கத்த தலைவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .