2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,சுமித்தி)


யாழ். மண்டைதீவில் கடந்த 28ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியொருவரின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

மண்டைதீவு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

மண்டைதீவு  புனித பேதுரு தேவாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஊர்வலமாகவும் வந்தனர்.

இதன் பின், பொது அமைப்புக்களின் சார்பில் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி, தீவக சிறுவர்  நன்னடத்தை உத்தியோகஸ்தர் றொகான், பிரதேசசபைத் தவிசாளர்கள், பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .